Meera Mitun Blast Actress | Bigg Boss | Nayanthara
மீரா மிதுன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு என்னை காப்பி அடிக்க வெக்கமாக இல்லையா என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Meera Mitun Blast Actress : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் மீரா மிதுன். எப்போதும் எதையாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்துவதையே வழக்கமாக கொண்டிருப்பவர்.

சூப்பர் மாடலான இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எவ்வளவு முறை தான் சொல்றது.. உங்களுக்கெல்லாம் சொரணையே இல்லையா?? கோலிவுட் முதல் பாலிவுட் வரை என்னை காப்பி அடிக்கறீங்க.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா எப்போது?? மேடையில் சாந்தனு கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ.!

அடுத்த முறை என்னை காப்பி அடித்தால் அந்த புகைப்படத்துடன் இதற்கு முன்னோடி மீரா மிதுன் என குறிப்பிடுங்க. இல்லையென்றால் என்னை காப்பி அடிக்கிறது யாருனு நான் வெளிப்படையா சொல்ல வேண்டியது இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தன்னுடைய கையில் வைத்துள்ள போனின் கவரின் கலர் தெரியும்படி போட்டோ போட்டிருப்பார்.

நயன்தாராவும் இதே போல ரெட் கலர் கவர் உடைய போனுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோவை வைரலாக்கி மீரா மிதுன் நயன்தாராவை தான் எச்சரிக்காறாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நெற்றியில் குங்குமம்.. கழுத்தில் தாலி, பிரபல நடிகருக்கு மனைவியான மீரா மிதுன் – வைரலாகும் புகைப்படங்கள்.!

அதே போல ரசிகர் ஒருவர் உங்களை மாதிரியே பாலிவுட் நடிகை கியாரே அத்வானி போட்டோஷூட் நடத்தியிருக்கார் என குறிப்பிட அதற்கு மீரா மிதுன் அனைவர்க்கும் நான் முன்னோடியா இருக்கறது பெருமையா இருக்கு என குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த கூத்தையெல்லாம் நீங்களே பாருங்க

Meera Mitun
Meera Mitun

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.