Meera Mitun Arrest Soon
Meera Mitun Arrest Soon

ஜாமினில் வெளி வராதபடி கைதாகிறார் மீரா மிதுன் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Meera Mitun Arrest Soon : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பின் மூன்றாவது சீசன் கலந்துகொண்டு அங்கும் சர்ச்சைக்குரிய ஒருவராகவே வலம் வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களாகவே தன்னுடைய சுய விளம்பரத்திற்காக தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களான விஜய் சூர்யா ரஜினி கமல் தனுஷ் என பல நடிகர்களை நடிகர்களை விமர்சனம் செய்து வருகிறார்.

திருமணமான பத்து நாளில் கணவன் மீது பாலியல் புகார், கைது செய்த போலீஸ் – அப்படியெல்லாம் வீடியோ வெளியிட்டு இப்படி சொன்னா எப்படி பூனம்?

இதனால் ஆவேசமான சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் மீராமிதுன் மீது புகார் அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இடுக்கி காவல்நிலையத்தில் துணைக் காவல் ஆய்வாளர் பிஜி ஜேக்கப் அவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து பிரபல பத்திரிகை என்று விசாரித்தபோது பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்திருப்பதாக இந்த வழக்கு நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்வதால் மீரா ஜாமினில் வெளி வராதபடி விரைவில் கைதாவார் என தெரிவித்துள்ளார்.

இவர் மீது எப்ஐஆர் வழக்கு பதியப்பட்டுள்ள ஆதாரங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.