Meera Mitun Against on Tik Tok
Meera Mitun Against on Tik Tok

என் பெயரை வைத்து சம்பாதித்த பணத்தை டிக் டாக் நிறுவனம் திருப்பி தரவேண்டுமென மீராமிதுன் பதிவிட்டுள்ளார்.

Meera Mitun Against on Tik Tok : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மீரா மிதுன். சூப்பர் மாடல் என மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக் கொள்பவர்.

சமூக வலைதளப் பக்கங்களில் தொடங்கி எதையாவது பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் அதனை முதல்வர் பிரதமருக்கு டேக் செய்து பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டிக் டாக் நிறுவனத்துக்கு எதிராக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் நான் டிக் டாக் பயன்படுத்துவதில்லை. இனியும் பயன்படுத்த மாட்டேன். ஆனால் டிக்டாக்கில் என்னுடைய பெயர், ஹாஸ்டேக் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பழிக்குப் பழி.. முகத்தில் துப்பிய இந்திரஜா.. பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி இவ்வாறு செய்யலாம்? என்னுடைய மார்க்கெட் வேல்யூவை பயன்படுத்தி டிக் டாக் நிறுவனம் சம்பாதித்து வருகிறது.

என்னுடைய பெயரை வைத்து சம்பாதித்த மொத்த பணத்தையும் டிக் டாக் நிறுவனம் திருப்பித் தரவேண்டும். இதனை சட்டப்படி அணுக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

மீரா மிதுன் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். உன் பெயரை வைத்து டிக் நிறுவனம் சம்பாதிக்கிறதா எனக் கிண்டல் அடிக்கின்றனர்? உனக்கு மார்க்கெட் வேல்யூ இருக்கிறதா என கேள்வி எழுப்புகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1277481425135001600?s=19
https://twitter.com/meera_mitun/status/1277483706949578753?s=19

மீரா மிதுன் இந்த பதிவை பார்த்த ரசிகர் குடித்துவிட்டு பேசுவதை இருப்பேன் என்று கூறியுள்ளார்.

https://twitter.com/Captain84451857/status/1277484147372482562?s=19

வெறும் மூணு படத்துல சின்ன சின்ன ரோலில் நடித்து விட்டு நான் செலிபிரிட்டி என்று சொல்லாதே இன்னொரு ரசிகர் விமர்சித்துள்ளார்.

கைலாசாவிற்கு வரவேற்கிறோம் அங்கு மட்டும் தான் உங்களுக்கு ஏற்றார் போல் இருக்கும் என இன்னொரு நெட்டிசன் கமெண்ட் அடித்துள்ளார்.

https://twitter.com/SriNithanandha/status/1277490494923137024?s=19

பைத்தியம் முத்தி போச்சு என இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்.

என்ன சரக்கு அடிச்சனு சொல்லு. அப்புறம் செலிபிரிட்டி செலிபிரிட்டின்னு சொன்னியே அது யாருன்னு சொல்லவே இல்ல என கிண்டல் அடித்துள்ளார் இன்னொரு நெட்டிசன்

காசு குடுடா டிரம்ப் என அமெரிக்க அதிபருக்கு டாக் செய்து கமெண்ட் அடித்துள்ளார் இன்னொரு நெட்டிசன்.

https://twitter.com/Imsaran02/status/1277491381817106432?s=19