Meera Mitun Against on Archana Kalpathi Statement
Meera Mitun Against on Archana Kalpathi Statement

சுஷாந்த் சிங்கை பார்த்து விஜய் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியான தகவலுக்கு மீராமிதுன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Meera Mitun Against on Archana Kalpathi Statement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில்.

அட்லி இயக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த இந்த திரைப்படத்தில் விஜய் ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரட்டை வேடங்களில் நடித்தார்.

வயதான தோற்றமான ராயப்பன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அர்ச்சனா கல்பாத்தி அளித்த பேட்டி ஒன்றில் சுஷாந்த் நடித்த ஒரு படத்தை பார்த்து தான் விஜய் ராயப்பனாக நடிக்க வைக்க முடிவு செய்தோம். விஜயும் இதற்கு ஒப்புக் கொண்டார் எனக் கூறியிருந்தார்.

எல்லாம் விதி.. பசு மாட்டோட வாக்குவாதம் செய்யும் மணிமேகலை – இவங்க அலம்பல் தாங்கலப்பா.!

இது குறித்து பிரபல இணையதள பத்திரிகை ஒன்று பதிவிட அந்தப் பதிவில் மீராமிதுன் தன்னுடைய எதிர்ப்பை கூறியுள்ளார்.

விஜய் ஒரு சீனியர் நடிகர். அவர் சுஷாந்த் சிங்கை பார்த்து நடிக்க ஒப்புக்கொண்டால் எனக் கூறுவது ஏற்க முடியாதது. உண்மையை கூற சுஷாந்த் இல்லை என்பதால் உங்கள் இஷ்டத்திற்கு பேசாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1277654601064275969?s=19