Meera Mitun About Kamal 232 Movie
Meera Mitun About Kamal 232 Movie

மாஸ்டர் லோகேஷ் கனகராஜ்க்கு இதை விட்டால் என்ன தெரியும் என நீண்ட நாட்களுக்குப் பிறகு சர்ச்சையைக் கிளப்பும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun About Kamal 232 Movie : தமிழ் சினிமாவில்வெளியான மாநகரம் கைதி ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.

இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார். கொரானா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 232 ஆவது படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

இது குறித்து மீரா மிதுன் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டுள்ளார்.

அஜித் நடித்த படத்தில் பாட்டு பாடிய கமல், பாடல் செம ஹிட் ஆனால் படம் பிளாப் – எந்த படம்? என்ன பாடல் தெரியுமா?

அந்த பதிவில் இயக்குனர் லோகேஷ் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் யாருக்கும் மூளையே கிடையாது. எவன் என்று நினைத்தாய் என்ற படத்தின் போஸ்டர் ஹாலிவுட் படம் ஒன்றில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது போல் உள்ளது.

மாஸ்டர் படத்தின் போஸ்டர் நான் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

மீரா மிதுனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரசிகர்கள் பலரும் மீராமிதுனின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக மீராமிதுன் சமூக வலைத்தளத்தில் எந்தவித பதிவையும் பதிவிடாமல் இருந்தார். அவர் இறந்து விட்டதாகவும் விரைவில் இன்வெஸ்டிகேஷன் தொடங்கும் எனவும் இறுதியாக பதிவு ஒன்று பதிவானது.

இதனையடுத்து மீராமிதுனின் அம்மா என் மகளை காணவில்லை என பேட்டி கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் மீரா மிதுன் மீண்டும் இந்த பதிவின் மூலம் ட்விட்டரில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்