Meera Mithun Tweet About Mugen and Tharshan | Bigg Boss 3 | Kamal Haasan | Sandy | Kavin | Vanitha Vijayakumar | Tamil Cinema
முகேன், தர்ஷன் ஆகியோர் மீது மீரா மிதுன் பரபரப்பு குற்றசாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Meera Mithun Tweet About Mugen and Tharshan : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் மீரா மிதுன்.

ஏற்கனவே விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அசிங்கப்பட்ட இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றும் சேரன் மீது அபாண்டமாக பொய் குற்றம் சாட்டி அசிங்கப்பட்டார்.

அதன் பின்னரும் தொடர்ந்து பல டீவீட்டை செய்து பிக் பாஸ் போட்டியாளர்களாக சாக்ஷி, அபிராமியை சீண்டி கொண்டிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது முகேன் மற்றும் தர்ஷன் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

என்னை பொருத்த வரை கவின் அப்படித்தான் – அபிராமி ஓபன் டாக் .!

இது குறித்த பதிவில் முகேன், தர்ஷன் இருவரும் முட்டாள்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவருமே அவர்களை பயன்படுத்தி கேம் விளையாடினார்கள் என கூறியுள்ளார்.

மேலும் இறுதி போட்டிக்கு பிறகு போட்டியாளர்கள் அனைவரும் சந்தித்து கொண்ட போது கூட ஆண்கள் யாரும் என்னிடம் பேசவில்லை.

சாண்டியை தவிர மற்ற ஆண்கள் அனைவருமே எனக்கு எதிராக தான் இருந்தார்கள், முகேன், தர்ஷன் கூட என்னை காயப்படுத்துவதையும் தனிமைப்படுத்துவதையுமே குறிக்கோளாக வைத்திருந்தார்கள். என்னை பார்த்து மிகவும் பொறாமை பட்டார்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.