Meera Mitun New Video
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மீரா மிதுன் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசும் மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

எதிர் கட்சிகள் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கையை வைத்து பேரணிகளை நடந்தி வருகின்றன.

இந்நிலையில் பிக் பாஸ் பிரபலமும் சூப்பர் மாடலுமான மீரா மிதுன் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மோடிஜிக்கு வாழ்த்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மீரா மிதுன் செய்யும் அனைத்து குற்றங்களுக்கும் பின்புலமாக இருப்பது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்சரா ரெட்டி தான் பின்புலமாக இருந்து வருகிறார் என ஜோ மைக்கேல் அளித்திருந்த பேட்டிகளில் கூறி இருந்தார்.

இப்படியான நிலையில் மீரா மிதுன் பிஜேபி-க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் எங்கயோ இடிக்குதே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய மீரா மிதுனுக்கும் ஆதரவும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.