Meera Jasmine

ஆறு வருடங்களுக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Meera Jasmine ReEntry in Cinema : தமிழ் சினிமாவில் சண்டைக்கோழி உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீரா ஜாஸ்மின். இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக கூட ஒரு படத்தில் நடித்திருப்பார்.

அப்போது ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த இவர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இதனால் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். ஆறு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும் நடிக்க உள்ளார்.

மலையாளத்தில் பிரபல இயக்குனர் சத்தியன் அந்திக்காடு இயக்கவுள்ள படத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.