அஜித்தின் உண்மையான பிறந்தநாள் மே 7 தானா என குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது பாலிவுட் நடிகையின் டுவிட்.

Meera Chopra About Ajith Birthday : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக ajith 61 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

அஜித்தின் உண்மையான பிறந்தநாள் தேதி மே 7 தானா?? பிரபல பாலிவுட் நடிகை ட்வீட்

அஜித் ஒவ்வொரு வருடமும் மே ஒன்றாம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த வருடமும் அவருடைய பிறந்த நாள் கடந்துவிட்ட நிலையில் இன்று பாலிவுட் நடிகை மீரா சோப்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஹாப்பி பர்த்டே அஜித் குமார் என பதிவு செய்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் அஜித்தின் பிறந்தநாள் மே 7 தானா என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். அஜித் பப்ளிசிட்டிக்காக மே ஒன்று என தனது பிறந்தநாளை மாற்றிக் கொண்டார் எனவும் சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று குக்கு வித் கோமாளி புகழ் அஸ்வின் குமாருக்கு பிறந்த நாள். இவரையும் ரசிகர்கள் ஏகே என அழைப்பதுண்டு. இதைத்தான் தவறுதலாக அஜித்குமார் என புரிந்துகொண்டு மீரா சோப்ரா பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் உண்மையான பிறந்தநாள் தேதி மே 7 தானா?? பிரபல பாலிவுட் நடிகை ட்வீட்

ஆனால் இந்த ட்வீட்டை வைத்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.