தல அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் பட இயக்குனரின் புதிய படைப்பாக மீண்டும் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

Meendum Movie Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சிட்டிசன். இந்த படத்தினை சரவணன் சுப்பையா என்பவர் இயக்கியிருந்தார்.

பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

அஜித்தின் சிட்டிசன் பட இயக்குனரின் புதிய படைப்பு.. இணையத்தை அதிர வைக்கும் மீண்டும் பட ட்ரைலர்

தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மீண்டும். இந்த படத்தில் கதிரவன் என்பவர் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நட்பே துணை பட புகழ் அனகா நாயகியாக நடித்துள்ளார். வைரமுத்து பாடல் வரிகளை எழுத நரேன் என்பவர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பிரணவ் ராயன், எஸ் எஸ் ஸ்டாலின், யார் கண்ணன், கேபிள் சங்கர், களவாணி பட வில்லன் துரை சுதாகர் உட்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Meendum Official Trailer | Kathiravan | Anagha | Sharavanan Subbaiya | Naren Balakumar |