10 லட்சம் ரூபாய் பறி போக போலீசில் கம்பளைண்ட் கொடுத்த மீனாட்சிக்கு பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. யமுனாவை அழைத்துக் கொண்டு பணத்தை திருப்பி கொடுக்க புஷ்பா வீட்டுக்கு போன மீனாட்சியிடம் இருந்து பணத்தை வாங்காமல் திருப்பிக் கொடுத்து அனுப்பினான் நீதிமணி.

பறி போன பத்து லட்சம்.. கம்ப்ளைன்ட் கொடுக்கப் போன இடத்தில் தவறாக பேசிய இன்ஸ்பெக்டர்.. கொந்தளித்த மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்.!

இதனையடுத்து இன்றைய எபிசோடில் பணத்துடன் ரோட்டில் நடந்து வரும் மீனாட்சியிடமிருந்து 10 லட்ச ரூபாயை பைக்கில் வந்த ஒருவன் மொத்தமாக பறித்துக் கொண்டு செல்ல பதறிப் போய் அவனை விரட்டி பிடிக்க முயற்சி செய்யும் மீனாட்சி ரோட்டில் கீழே விழுகிறாள். பொதுமக்களில் சிலர் அந்த திருடனை பிடிக்க முயற்சி செய்தும் பிடிக்க முடியாமல் தப்பி செல்கிறான். அடுத்ததாக மீனாட்சியையும் யமுனாவையும் ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இன்னொரு பக்கம் ஸ்கூட்டியில் செல்லும் சக்தியை வெற்றி புல்லட்டில் பாலோ செய்து வருகிறான். இந்த நேரத்தில் துர்கா சக்திக்கு போன் செய்து யமுனாவும் அம்மாவும் வீட்டிற்கு வரவில்லை எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்ல போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் மீனாட்சி தன் பணம் திருடு போனதை இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறாள்.

இன்ஸ்பெக்டர் மீனாட்சியிடம் மெஸ் நடத்தும் உன்னிடம் ஏது 10 லட்சம், என்று கேட்டு பெண்களை வைத்து தொழில் செய்கிறாயா என்று தவறாக பேச கொதித்து எழுந்த மீனாட்சி யோவ் நிறுத்தியா நாங்க எல்லாம் நெருப்பு.. இந்த உடம்பு விக்கிறதுக்கு இல்ல தன்மானத்தோட தலை நிமிர்ந்து வாழ்வதற்கு. நான் மட்டும் இல்ல என் பொண்ணுகளும் நெருப்பு தான் யாராவது அவங்கள நினைச்சா சுட்டு பொசிக்கிடுவேன் என இன்ஸ்பெக்டரை திட்டி தீர்த்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறாள்.

வெற்றி பின் தொடர ஸ்கூட்டியை நிறுத்தும் சக்தி வெற்றியின் அருகில் வந்து ஏன் என்னை பின்தொடர்கிறாய் என்று கேட்க துப்பட்டா இழுத்து சக்தி கீழே தடுமாற வெற்றி அவளை தாங்கி பிடித்து பின்பு துப்பட்டா ஸ்கூட்டியில் மாட்டி இருந்த விஷயத்தை சொல்ல சக்தி வெற்றியிடம் நன்றி சொல்லி அங்கிருந்து கிளம்புகிறாள்.

பறி போன பத்து லட்சம்.. கம்ப்ளைன்ட் கொடுக்கப் போன இடத்தில் தவறாக பேசிய இன்ஸ்பெக்டர்.. கொந்தளித்த மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்.!

மெஸ்ஸிக்கு வரும் கார்த்திக் யமுனாவை எங்கே என்று தேடி சக்தியிடம் விசாரிக்க சக்தி கோபமாக பேசிவிட்டு சாப்பாடு வைக்க மீண்டும் கார்த்திக் யமுனாவை கூப்பிட கோபத்தில் சக்தி என்னவென்று விசாரிக்க சாம்பாரில் உப்பு இல்லை என்று சொல்கிறான். சக்தி நிறைய உப்பை கொண்டு வந்து கார்த்திக்கின் இலையில் கொட்டுகிறாள். மீனாட்சி, யமுனா என இருவரும் மெஸ் வாசலில் நுழைய பணம் காணாமல் போன விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று மீனாட்சி விஷயத்தை மூடி மறைக்கிறாள்.

அடுத்து நடக்கப் போவது என்ன? சக்திக்கு விஷயம் தெரிந்தால் என்ன நடக்கும்? பணத்தை திருடியது யார் என்று தெரிந்து கொள்ள தினம் தோறும் இரவு 9:00 மணிக்கு மீனாட்சி பொண்ணுங்க சீரியல் தவறாமல் பாருங்கள்.