21 ஆண்டுகளுக்குப் பிறகே பிரபல நடிகருக்கு ஜோடியாக மீனா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Meena Pair With Balakrishna : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வந்த இவர் திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மீனா - வெளியான அதிரடி தகவல்

தற்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்சை தொடங்கி அண்ணாத்த, த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தினை கோபிசந்த் மிலினேனி இயக்க உள்ளார். இதற்கு முன்னதாக 1999 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.