Medicinal uses of Pulungalarisi
Medicinal uses of Pulungalarisi

# புழுங்கல் அரிசி எளிதாக, விரைவாக ஜீரணம் ஆகக் கூடிய பைபர் குறைவாக உள்ள உணவாகவும் உள்ளது.

அரிசி சாதம் முழுமையாக ஜீரணம் ஆக ஒரு மணி நேரம் கூட போதுமானது. இது சிறியவர் முதல் முதியவர் வரை அனைவருக்கும் நோயாளிகளுக்கும் பொருத்தமான உணவாகும்.

# உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே புழுங்கலரிசி கஞ்சியை சாப்பிடலாம். இந்த கஞ்சியில் பால், சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இல்லை, மோர், உப்பு சேர்த்து பருகலாம்.

# சளியால் அவதிப்படுபவர்களுக்கு புழுங்கலரிசியுடன் திப்பிலி சேர்த்து பருகலாம்.

# வயிற்றுக் கொதிப்பிருப்பவர்க்கு புழுங்கலரிசியுடன் சீரகம், மல்லிவிதையும் சேர்த்து பருகலாம்.

# பேதி இருப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாறு, மாதுளம் பிஞ்சு, வில்வப்பிஞ்சையும் சேர்த்து கஞ்சி தயாரித்து கொடுக்கலாம்.

# புழுங்கலரிசியுடன் கோதுமை, பச்சைப்பயிறு சேர்த்து வறுத்து, ஒரு லிட்டர் நீரில் கால் லிட்டராக குறையும் வரை காய்ச்சி கஞ்சியாக்கி குடிக்க புஷ்டியை தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here