Medical Benefits of Barley Water : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits

Medical Benefits of Barley Water :

* வெங்காயத்தாளுடன் பார்லிபொடி சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க உதவும்.

* பார்லியுடன் வெண்டைக்காய் விதையை போட்டு காய்ச்சி குடிக்க நீர்கடுப்பு குறையும்.

* பார்லியை அரைத்து மாவாக்கி, 2 தேக்கரண்டி அளவு எடுத்து 3 டம்ளர் நீர்விட்டு குக்கரில் 3-4 விசில் வரும் வரை விட்டு ஆறியபின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை, தேவை எனில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம். இது உடல் சூட்டைக் குறைக்கும்.

* கரும்புச் சாற்றில் பார்லியை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டுவர நீர்க்கடுப்பு, நீரடைப்பு விலகும்.

* கர்ப்பகாலத்தில் உள்ள தாய்மார்களுக்கு காலில் சுரம் ஏற்பட்டால் நீர் நன்கு போவதற்காக தருவார்கள். கர்ப்பிணிகளுக்கு வரும் கால் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

பசும்பாலை விட, ஆட்டுப் பாலில் சத்துக்கள் அதிகமா? தெரிந்து கொள்வோமா?

* கொலஸ்ட்ராலை அழிப்பதற்கு இந்த பார்லி கஞ்சி ஒரு சிறந்த மருந்து. இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது.

* இதை அடிக்கடி சாப்பிடுவது மூலம் நரம்புகள் வலுப்படும். உடல் பருமன் குறைய சிறுகீரை,பார்லி ஆகியவற்றோடு சீரகம்,மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

* பார்லி அரிசி 20 கிராம், புளிய இலை 40 கிராம் காய்ச்சி கஷாயமாக்கி குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.

* உளுந்து, பார்லி, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் இவை அனைத்தையும் அரைத்து கஞ்சியாக காய்ச்சி குடிக்க வெள்ளைப்படுதல் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here