Bigil Poster
விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Meat shop association protest against bigil poster – அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் பிகில்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. விழாவை முடித்துவிட்டு நடிகர் விஜய் அமெரிக்கா சென்றுவிட்டார்.

பிகில் திரைப்படம் வருகிற தீபாவளி விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் போஸ்டருக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிகில் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி வெளியானது.

மீன் சந்தையில் அப்பா விஜய் அமர்ந்திருபப்து போலவும், அவரின் அருகில் மகன் விஜய் கால்பந்தை வைத்துக்கொண்டு நிற்பது போலவும் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிகில் போஸ்டரில் விஜய் கறி வெட்டும் கட்டையின் மீது செருப்பு கால் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

கறிவெட்டும் கட்டையின் மீது செருப்பு காலுடன் இருப்பது இந்தியா முழுவதும் உள்ள இறைச்சிக்கடை உரிமையாளர்களை அவமதிப்பாகவும், அந்த காட்சியை நீக்க வேண்டும் எனவும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது.

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பாளர் பதிவிட்ட ட்வீட்.!

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக விஜய் பல கருத்துகளை கூறியிருந்தார்.

எனவே, போஸ்டர் வெளியாகி 3 மாதங்கள் கழித்து தற்போது பிரச்சனை துவங்கியிருப்பதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.