இறப்பதற்கு முன்பு அப்பாவின் பாக்கெட்டில் இருந்த பணம் எவ்வளவு என உருக்கமாக பேசியுள்ளனர் மயில்சாமியின் மகன்கள்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. காமெடி குணச்சித்திர வேடம் என பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

மற்றவர்களுக்கு உதவுவதில் வள்ளலாக இருந்த மயில்சாமியின் மறைவு திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மயில்சாமி கடைசியாக நடித்துள்ள கிளாஸ்மேட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மயில்சாமியின் மகன்கள் கலந்து கொண்டு பேசினர். அப்பா இந்த படத்துக்காக 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினார். அதில் 25 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு கொடுத்துவிட்டு நான்காயிரம் ரூபாயை அசிஸ்டன்களுக்கு கொடுத்தார். ஆயிரம் ரூபாய் எங்களுக்கு கொடுத்துவிட்டார். மீதி அப்பாவின் கையில் இருந்தது வெறும் 30 ரூபாய் தான் என அசிஸ்டன்ட் சொன்னதாக மயில்சாமி மகன் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பாவின் போன் சுவிட்ச் ஆஃப் ஆகாது அவர் செய்த உதவிகளை தொடர்ந்து நாங்கள் செய்வோம் என மயில்சாமியின் மகன்கள் பேசியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.