Mayanadhi
அழகிய காதலை பேசும் படமாக உருவாகியுள்ள மாயாநதி திரைப்படம் வரும் ஜனவரி 31 முதல் திரைக்கு வர உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் அபி சரவணன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைபடம் மாயநதி. இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார் வெண்பா.

அசோக் தியாகராஜன் கதை எழுதி இயக்கி தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராஜா பவத்தரின் இசையமைத்துள்ளார். கோபி கிருஷ்ணா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அழகிய காதல் கதையை கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 31-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தின் போஸ்டர், புகைப்படங்கள், டீஸர் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.