தனுஷ் மற்றும் சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை ரிச்சாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.

Mayakkam Enna Richa Baby Photos : தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ரிச்சா. இந்த இரண்டு படங்களிலும் நடித்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

தனுஷ், சிம்பு பட நடிகை ரிச்சாவுக்கு குழந்தை பிறந்தது. என்ன குழந்தை? என்ன பெயர் தெரியுமா?

பப்ளிமாஸ் போல் இருந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த போதே திருமணம் செய்துகொண்டு பர்சனல் வாழ்க்கைக்கு தாவி விட்டார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு கடந்த மே 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய மகனுக்கு லுகா ஷான் என பெயரிட்டுள்ளார்.