விஷால் மற்றும் வரலட்சுமி நடிப்பில் உருவாகியிருந்த மத கஜ ராஜா திரைப்படம் எட்டு வருடங்களுக்குப் பிறகு வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது

Mathakaja Raja Movie Release : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படங்களில் ஒன்று மதகஜ ராஜா. 8 வருடத்திற்கு முன்னர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்து இருந்தார்.

விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ள இத்திரைப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை தொடர்ந்து ஒத்திவைத்து அந்த தயாரிப்பு நிறுவனம் ஒருகட்டத்தில் அந்த முயற்சியை கைவிட்டது.

எட்டு வருடங்களாக கிடப்பில் கிடந்த விஷால், வரலட்சுமி நடித்த திரைப்படம் ரிலீஸ் - வெளியான அதிரடி தகவல்.!!

இப்படியே எட்டு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து இந்த படத்தை நெட்பிளக்ஸ் வழியாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் நடித்திருந்த கலாபவன், சிட்டிபாபு, மணிவண்ணன் ஆகியோர் தற்போது நம்முடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.