வலிமை மற்றும் மாஸ்டர் என இரண்டு படத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையை பற்றி தான் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Master Vs Valimai Movie Details : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப் போயுள்ளது.

இது திட்டம் போட்டு நடந்ததா?? இல்ல.. வலிமை மற்றது மாஸ்டர் படத்தின் இடையே இருக்கும் இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா??

இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் அஜீத் தன்னுடைய 61 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் வலிமை மற்றும் மாஸ்டர் படத்திற்கு இடையேயான ஒற்றுமை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது வலிமை படத்தின் ரன்னிங் டைம் மூன்று மணி நேரம் 10 நிமிடங்கள் என இருந்த நிலையில் பிறகு இது இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் 35 நொடிகள் என குறைக்கப்பட்டது.

இது திட்டம் போட்டு நடந்ததா?? இல்ல.. வலிமை மற்றது மாஸ்டர் படத்தின் இடையே இருக்கும் இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா??

இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் மற்றும் 35 நொடிகள் தான். இதனைப் பார்த்த ரசிகர்கள் இது திட்டமிட்டு நடந்ததா இல்லை தற்செயலாக நடந்ததா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேசமயம் இந்த இரண்டு படங்களுக்கும் சென்சாரில் யு ஏ சான்றிதழ் தான் கிடைத்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.