Master Vs Eshwaran Movie Release

விஜயால் சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் ரிலீஸை தள்ளிப் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Master Vs Eshwaran Movie Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இவரது நடிப்பில் மாநாடு மற்றும் ஈஸ்வரன் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என சிம்பு கூறியதாக தகவல் வெளியானது.

பொங்கல் தினத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் சிம்புவின் ஈஸ்வரன் படத்திற்கு 100 தியேட்டர்கள் மட்டுமே கிடைக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக ஈஸ்வரன் படக்குழுவினர் இந்த படத்தின் ரிலீசை ஜனவரி இறுதிக்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிம்புவின் பிறந்தநாளில் ஈஸ்வரன் படத்தை வெளியிட அவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.