Master Vijay Sethupathi Secrets
Master Vijay Sethupathi Secrets

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க யார் காரணம் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Master Vijay Sethupathi Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் கூற லோகேஷ் கனகராஜ் கொஞ்சம் தயக்கம் காட்டி உள்ளார். அதற்கு காரணம் அவருடைய கதாபாத்திரம் முழுக்க முழுக்க நெகட்டிவ் வேடம் என்பது தான்.

‘தல’ அஜித்தின் ‘வலிமை’ OTT ரிலீஸா.? – தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம்

அதன் பின்னர் இது குறித்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த சதீஷ், விஜய் சேதுபதியிடம் கூற அவர் லோகேஷிடம் கதை கேட்டுள்ளார்.

கதை கேட்டதும் விஜய் சேதுபதிக்கு பிடித்து விட்டதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

முதல் முறையாக விஜய்யும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக இருந்தது.

ஆனால் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸாகாமல் தள்ளி போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.