Master Vijay Role Details
Master Vijay Role Details

மாஸ்டர் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன.

Master Vijay Role Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்‌. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினரான பிரிட்டோ அவர்கள் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ளார்.

நடிகர் விஜய் இன்னமும் கொரானா வைரஸ் விவகாரத்திற்கு உதவாமல் இருப்பது இதனால் தானா? – அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்.!

விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க சாந்தனு, மகேந்திரன், சேத்தன், சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஆண்ட்ரியாவும் வில்லி வேடத்தில் நடித்துள்ளார் என்பதெல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்போது இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் ஒன்று வில்லன் வேடம் என தகவல்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன.

ஆனால் படக்குழு தரப்பில் இருந்து நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இரட்டை வேடம் எல்லாம் இல்லை விஜய்க்கு ஒரே வேடம் தான் என கூறியுள்ளனர்.