Master Trailer Update
Master Trailer Update

பிரபல நடிகர் ஒருவர் ஏப்ரல் 14-ற்குள் நல்ல அப்டேட் வரும் எனக் கூறியது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Master Trailer Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா இன்னும் பலர் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதியே திரைக்கு வர இருந்தது.

உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. ரஜினி, கமல், அஜித், விஜய்க்கு பிரபல நடிகை வைத்த கோரிக்கை – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

ஆனால் கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் வருகிறது. சரி ட்ரைலரயாவது விடுங்க என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தில் நடித்துள்ளார் மகேந்திரனிடம் ரசிகர்கள் படத்தின் அப்டேட் குறித்து கேட்ட ஏப்ரல்14- க்குள் நல்ல அப்டேட் வரும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் ஏப்ரல் 14ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாகிறது என ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தொடங்கவே மகேந்திரன் நான் அப்படி சொல்லவே இல்லை. உங்களைப் போல நானும் ஒரு ரசிகனாக காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.