Master Trailer Release Details

மாஸ்டர் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Master Trailer Release Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

விஜயுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீமன், மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

மாஸ்டர் பட ரிலீஸ் எங்களுக்கே பெரிய ஏமாற்றம் தான்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

இதனால் இயல்பு நிலை திரும்பி திரையரங்குகள் திறக்கப்பட்டதும் தான் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்திருந்த பேட்டியில் 2021 வருடத்தின் ஆரம்பத்தில் இப்படம் வெளியாகலாம் என கூறியிருந்தார்.

அதாவது மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என மறைமுகமாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது படக்குழு மாஸ்டர் பட ட்ரெய்லரை புத்தாண்டு விருந்தாக ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.