டிராக் லிஸ்ட் மூலமாக மாஸ்டர் டீம் அஜித்தை வம்பிழுப்பது போல இருந்ததால் ரசிகர்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படம் உலகம் முழுவதும் ஏப்ரலில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவும் நேற்று நடந்து முடிந்து விட்டது. ட்ரைலர் மார்ச் 22-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்.. ஏப்ரலில் மாஸ்டர் ரிலீசுக்கு வாய்ப்பே இல்ல? – காரணம் இது தான், இந்த லாஜிக்கும் சரியா தான் இருக்கு.!

இந்நிலையில் நேற்று வெளியான டிராக் லிஸ்டில் ஒரு பாடலின் பெயர் தருதல கதறுனா என்று இருந்ததால் இது அஜித்தை சீண்டும் விதமாக இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. அஜித் ரசிகர்களும் கொந்தளிப்படைய தொடங்கினர்.

இதனால் மாஸ்டர் படக்குழு உடனே அந்த பெயரை மாற்றி போனால் போகட்டும் என மாற்றி புது டிராக் லிஸ்ட்டை வெளியிட்டது.

மாலையில் இசை வெளியீட்டு விழாவில் நண்பர் அஜித்தை போலவே டிரஸ் பண்ண ஆசைப்பட்டு தான் கோர்ட் சூட்ல வந்திருக்கேன் எனவும் பேசியுள்ளார். இது ஓரளவிற்கு அஜித் ரசிகர்களை ஷாந்தப்படுத்துயுள்ளது.

மேலும் இந்த சமயத்தில் அஜித்தும் விஜயும் ஒன்றாக இருப்பது போல ஒரு போட்டோ வந்தாலே போதும் ரசிகர்களின் மொத்த சண்டையும் ஓய்ந்து விடும் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Master Track List

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.