Master Tickets Booking in Australia

ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Master Tickets Booking in Australia : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகள், பிரச்சனைகளை தாண்டி வரும் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தியில் மட்டும் இத்திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் டிக்கெட் புக்கிங் பல்வேறு இடங்களில் தொடங்கி படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படியான நிலையில் ஆஸ்திரேலியாவிலும் மாஸ்டர் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

டிக்கெட் புக்கிங் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 30 லட்சம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது விஜய் ரசிகர்களை உற்சாகபடுத்தி உள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 80% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.