Master Teaser Trolls

மாஸ்டர் திரைப்படம் கமல்ஹாசன் நடித்த படத்தின் காப்பி என நெட்டிசன்கள் புகைப்படங்களை வெளியிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

Master Teaser Trolls : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தீபாவளி விருந்தாக படத்தின் டீசர் வெளியானது.

படத்தின் டீசரில் இடம்பெற்ற காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் இது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தின் காப்பி என கண்டறிந்துள்ளனர்.

கமல் வேடத்தில் விஜயின் கௌதமி கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளனர். கல்லூரியில் நடக்கும் கலவரத்தை ஹூரோ ஒடுக்குவது இந்த படத்தின் கதை என கூறி வருகின்றனர்.

அதுபோல் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் டீஸர் வெளியானதை அடுத்து இது நெட்பிளிக்ஸ வெப் சீரிஸ் தொடர் ஒன்றின் காப்பி என்பதையும் நெட்டிசன்கள் கிண்டலடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.