Master Soundarya Reply to Dirty Comment

சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் படுக்கைக்கு அழைக்க அதனை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளார் மாஸ்டர் பட நடிகை.

Master Soundarya Reply to Dirty Comment : தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சௌந்தர்யா. இவர் முகேன் ராவ் உடன் இணைந்து சத்தியமா சொல்லுறேன் டி என்ற பாடலைக் கூட பாடியிருந்தார்.

அதன் பின்னர் இவர் தளபதி விஜயின் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான வணக்கம் டா மாப்ள என்ற படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமூக வலைதளப் பக்கங்களில் இப்போது ஆக்டிவாக இருக்கும் இவரிடம் ரசிகர் ஒருவர் படுக்கைக்கு வா எனவும் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதனால் கடுப்பான சௌந்தர்யா அந்த நபர் அனுப்பிய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை ஷேர் செய்துள்ளார்.

இவர் வெளியிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.