Master Songs Details
விஜய் படத்தால் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஸ்டைலில் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Master Songs Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கம்மிங் என இரண்டு சிங்கிள் டிராக்குகள் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா மார்ச் 15-ல் நடக்க உள்ளது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்கள் வேண்டாம்.. கட் அண்ட் ரைட்டாக கூறி விட்ட விஜய் – காரணம் என்ன தெரியுமா?

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக லோகேஷ் படத்தின் கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார். அதற்கு அவர் இயக்கிய படங்கள் தான் சாட்சி.

இப்படியான நிலையில் மாஸ்டரில் 9 பாடல்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுவது கொஞ்சம் நம்ப முடியாத ஒன்றாக தான் இருக்கிறது. இது எந்தளவுற்கு உண்மை என்பது படத்தின் டிராக் லிஸ்ட் வெளியானால் தெரிந்து விடும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.