Master Single Track Poster
மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக் போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.

Master Single Track Poster Controversy : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வீடியோ வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த போஸ்டரில் தளபதி விஜய் கையில் சரக்கு பாட்டிலுடன் இருக்கிறார். ஏற்கனவே சர்காரில் டம் அடிப்பது போல இருந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது கையில் மது பாட்டிலுடன் இருப்பதும் சர்ச்சையை கிளப்பும், அன்புமணி ராமதாஸ் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது போல இந்த போஸ்டருக்கும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை கிளம்பும் என கூறப்படுகிறது.

Master Single Track Poster

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.