Master Shooting Spot Photo
விஜய்க்கு எதிராக பாஜகவின் போராட்டத்தில் இறங்கிய இடத்தில் போலீஸ் விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுயுள்ளது.

Master Shooting Spot Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் வீட்டில் IT ரைடு நடந்து முடிந்ததை அடுத்து மீண்டும் அவர் நெய்வேலி சுரங்க பாதையில் நடந்து வரும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் பாஜக-வினர் சுரங்க பாதையில் ஷூட்டிங் நடந்த கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விஜய்க்கு ஆதரவாக அந்த இடத்தில் ரசிகர்கள் குவிய தொடங்கினர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத போலீஸ் விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை ஓட விட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுரங்கத்தில் ஷூட்டிங் நடத்த முறையான அனுமதி இருந்தும் தேவையில்லாமல் போராட்டம் செய்வபர்களை விட்டு விட்டு ரசிகர்கள் மீது தடியடி நடத்தியது சரியா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.