Master Sheff Show in Sun Tv

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக புதிய நிகழ்ச்சியை களமிறக்க உள்ளது சன் டிவி.

Master Sheff Show in Sun Tv : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. மிகவும் வித்தியாசமான முறையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சமையல் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் எனலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை காட்டிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானதற்கு பதிலாக தினமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஒளிபரப்புங்கள் என கோரிக்கை வைத்தவர்கள் எக்கச்சக்கம்.

அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவி மாஸ்டர் செப் என்ற புதியதொரு சமையல் நிகழ்ச்சி களமிறக்க உள்ளது. வெவ்வேறு நாடுகளில் உள்ள மக்களை இணைத்து இந்த சமையல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏற்கனவே ப்ரோமோ வீடியோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. எத்தனை நிகழ்ச்சி வந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நிகராகாது என அவரது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.