Master
மாஸ்டருக்காக காத்திருந்து புள்ளிங்கோ பலரும் ஏமார்ந்து போயுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா மற்றும் பலர் இப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குகிறார்.

புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31-ம் தேதி மாலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனையடுத்து புத்தாண்டான நேற்று மாலை 5 மணிக்கு செகண்ட் லுக் வெளியாகும் என தயாரிப்பாளர் பிரிட்டோ பெயரில் வலம் வரும் போலி கணக்கில் ட்வீட் ஒன்று பதிவானது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலர் உண்மை என நம்பி 6 மணிக்கு செகண்ட் லுக் வரும் வரும் என எதிர்பார்த்து ஏமார்ந்து போனது தான் மிச்சம்.

படக்குழுவும் பர்ஸ்ட் லுக் போஸ்டேரோட நிறுத்தாம செகண்ட் லுக் போஸ்டர் விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.