Master Satellite Rights
Master Satellite Rights

மாஸ்டர் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Master Satellite Rights : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் ரிலீசாகாமல் போனது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் தமன்னாவுக்கு திருமணமா?? – வைரலாகும் பரபரப்புத் தகவல்.!

மேலும் இப்படம் அமேசானில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்பட்டிருந்த நிலையில் அது உண்மை அல்ல என படக்குழு கூறியிருந்தது.

மேலும் தியேட்டரில் மட்டுமே தான் படம் ரிலீசாக வேண்டும். என்னுடைய ரசிகர்கள் அதற்காகத்தான் நான் படம் நடிக்கிறேன் என விஜய் கூறியதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூபாய் 20 கோடிக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் 20 கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.