Master Release Date Secret
Master Release Date Secret

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் டேட் பற்றிய தகவலை விஜய் நண்பர் வெளியிட்டுள்ளார்.

Master Release Date Secret : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கநகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆண்ட்ரியா ஆகியோர்கள் எதிர்மறை வேடத்தில் நடித்துள்ளனர். மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க சாந்தனு, விஜய் நண்பர் சஞ்சீவ் என இன்னும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கொரானா நிவாரணம் – வேற ரூட்டில் பிளான் போடும் விஜய், அஜித் – என்ன செய்ய போகிறார்கள் தெரியுமா?

ஏப்ரல் 9ஆம் தேதி அதாவது இன்று வெளியாக வேண்டிய இப்படம் கொரானா வைரஸ் தாக்கத்தினால் தள்ளிப் போய் வருகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய சஞ்சீவ் இப்படம் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ல் வெளியாகும் என கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இது உண்மையில் சஞ்சீவின் கணக்கு தானா என்பதும் தெரியவில்லை. இருப்பினும் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.