Master Release Date Expectation
Master Release Date Expectation

மாஸ்டர் ரிலீசுக்காக படக்குழு இரண்டு நாட்களை தேர்ந்தெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Master Release Date Expectation : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

உலகம் முழுவதும் இப்படம் மே 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போய்விட்டது.

இந்த நேரத்தில் தியேட்டர்கள் திறந்தவுடன் முதல் படமாக மாஸ்டர் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வருகிறது.

வாத்தி கம்மிங் பாடலுக்கு ட்யூன் போடும் இரண்டு கைகளையும் இழந்த ரசிகர் – அனிருத் வெளியிட்ட எமோஷனல் வீடியோ!

இந்த நிலையில் தற்போது படக்குழு இப்படத்தை ரிலீஸ் செய்ய இரண்டு தேதியை தேர்ந்தெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 22 அல்லது தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13 என இரண்டு தேதிகளை முடிவு செய்துள்ளது.

இந்த 2 தேதிகளில் ஒரு தேதியில் தான் மாஸ்டர் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.