Master Record in 50th Day

படம் வெளியான 50வது நாளில் மாஸ்டர் திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் ஓடி புதிய சாதனையை படைத்துள்ளது.

Master Record in 50th Day : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர். என்னதான் பிரபல இயக்குனரின் மகனாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் முழுக்க முழுக்க தன்னுடைய விடாமுயற்சி மற்றும் கடுமையான உழைப்பால் இன்று உச்சத்தை தொட்டுள்ளார். இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு மோசமான விமர்சனங்களை சந்தித்த இவர் இன்று அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக உயர்ந்துள்ளார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர். மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரஙகள் தெரிவித்தன. சமீபத்தில்தான் இந்த படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் நடந்து முடிந்தது.

50-ஆவது நாளில் மாஸ்டர் திரைப்படம் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் 156 திரையரங்குகளில் ஓடியுள்ளது. தல அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் ஐந்தாவது நாளில் 125 திரையரங்குகளில் ஓடியது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் 50-ஆவது நாளில் 135 திரையரங்குகளில் ஓடியது. இதன் மூலம் அஜித் மற்றும் ரஜினியின் சாதனையை பின்னுக்குத் தள்ளி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் புத்தம் புதிய சாதனையை படைத்துள்ளது. மாஸ திரைப்படத்தின் இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மாஸ்டர் திரைப்படத்தை தொடங்கி தளபதி விஜய் அடுத்ததாக கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்க உள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் திரைப்படம் உருவாக இருந்த நிலையில் திடீரென அவர் விலகிக் கொண்டதால் நெல்சன் திலிப்குமாருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.