Master Premiere Telecast in Sun Tv

விஜய் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமாக சன் டிவியில் மாஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Master Premiere Telecast in Sun Tv : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது இந்த திரைப்படம் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. வரும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் மாஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படம் டி ஆர் பி யில் என்னென்ன சாதனைகளை படைக்கப் போகிறது என்பதை காண விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மாஸ்டர் திரைப்படம் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.