Master Pre-Release Collection in Chennai
Thalapathy Vijay Master Movie Stills HD

டிக்கெட் புக்கிங்கில் மட்டும் சென்னையில் மாஸ்டர் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Master Pre-Release Collection in Chennai : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா சாந்தனு என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்காகி படக்குழுவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தின் காட்சிகளை லீக் செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறமிருக்க மாஸ்டர் திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் இதுவரை 24 திரையரங்குகளில் 488 ஷோக்கள் புக்காகி உள்ளது. அவற்றை பணமாக மதிப்பீடு செய்யும்போது ரூபாய் 1.21 கோடி வசூல் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.