Master Overseas Update
Master Overseas Update

மாஸ்டர் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Master Overseas Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 9ம் தேதியே திரைக்கு வர இருந்தது.

பிகினி உடையில் காதலனுடன் முத்தமிட்டு சம்மரை கொண்டாடும் பிகில் வில்லனின் மகள்‌ – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

ஆனால் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

அமேசான் ப்ரைம் வீடியோவில் படம் நேரடியாக வெளியாவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் உண்மையில்லை என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமை ரூபாய் 30 கோடிக்கு விலை போயுள்ளது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் இதே 30 கோடிக்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.