மாஸ்டர் படம் OTT-யில் ரிலீசாகிறதா? - தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | Thalapathy Vijay | Master

Master OTT Rights Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜயுடன் விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

மாஸ்டர் படம் OTT-யில் ரிலீசாகிறதா? - தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்

இந்த படம் ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் கொரானா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதால் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

இதனையடுத்து படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. அதேசமயம் இந்த படத்தை OTT-யில் வெளியிடப் போவதாகவும் பலமுறை தகவல்கள் வெளியாகின. ஆனால் அதையெல்லாம் படக்குழு தொடர்ந்து மறுத்து வந்தது.