Master OTT Release Controversy

மாஸ்டர் டீம் விதிமுறைகளை மீறி OTT ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Master OTT Release Controversy : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல விமர்சனத்தையும் வசூலைப் பெற்று வருகிறது.

ஆனாலும் சில இடங்களில் எதிர்பார்த்த அளவிற்கு படம் வசூல் செய்யவில்லை, தோல்வியைத் தழுவியதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த படம் கடந்த ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 100% இருக்கைக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் படக்குழு மாஸ்டர் படத்தை பொங்கல் ரிலீசாக களமிறக்கியது.

விஜயும் முதல்வரை சந்தித்து அனுமதி கேட்க அவரும் அனுமதி அளிக்க அதன்பின்னர் மத்திய அரசும் நீதிமன்றமும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழி இல்லாமல் 50 சதவீத இருக்கைக்கு அனுமதி என்ற உத்தரவே தொடரும் என தமிழக அரசு மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் படக்குழுவிற்கு வசூலில் சறுக்கல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக படம் வெளியான 16 நாட்களிலேயே அதாவது வரும் ஜனவரி 29ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது.

பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 35 நாட்கள் முடிந்த பின்னரே OTT தலங்களில் வெளியாக வேண்டும் என்பது தான் தற்போதைய ஒப்பந்தம். மாஸ்டர் திரைப்படம் பெரிய படம் என்பதால் 45 நாட்கள் கழித்தே OTT-ல் ரிலீஸ் செய்ய வேண்டும்.

தற்போது இதனை மீறி 16 நாட்களில் மாஸ்டர் படத்தை OTT ரிலீசில் படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூபாய் 15 கோடிக்கு வாங்கி இருந்தது.

தற்போது படக்குழு வெகு விரைவில் வெளியிட ஓகே சொல்லியிருப்பதால் அமேசான் நிறுவனம் கூடுதலாக ரூபாய் 35 கோடி படக்குழுவிற்கு செலுத்தியுள்ளது. அதாவது ரூபாய் 50 கோடிக்கு இந்தப் படத்தின் OTT ரிலீஸ் உரிமையை வாங்கியுள்ளது அமேசான் நிறுவனம்.

படம் வெளியான 16 நாட்களில் மாஸ்டர் படத்தை OTT-யில் வெளியிடுவதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் திங்கள் முதல் அனைத்து தியேட்டர்களில் இருந்தும் மாஸ்டர் படத்தை திரையிடுவதை நிறுத்த அவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மாஸ்டர் OTT ரிலீஸ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.