Master OTT Release Announcement

மாஸ்டர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Master OTT Release Announcement : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்திருந்த திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. தொடர்ந்து வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

படம் வெளியாகி 10 நாட்களுக்கு மேலாகியும் திரையரங்குகளில் இன்னும் ஹவுஸ்புல்லாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படியான நிலையில் வரும் ஜனவரி 29ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை அப்செட்டாக்கி உள்ளது. திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அமேசானில் வெளியானால் படத்தின் வசூல் நிச்சயம் பாதிக்கும் என ரசிகர்கள் நொந்து கொள்கின்றனர்.

படத்தின் OTT ரிலீஸை தள்ளி போடலாம் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.