விஜயின் மாஸ்டர் டைட்டிலும் காப்பி லுக்கும் காப்பி என நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிக்கும் படங்களில் அப்டேட்கள் எது வந்தாலும் ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி தீர்ப்பது வழக்கம். அதே போல் நெட்டிசன்கள் சிலர் இது அந்த படத்தோட காப்பி இந்த படத்தோட காப்பி என சில புகைப்படங்களை பரவ விடுவது வழக்கமான ஒன்று.

தற்போதும் அப்படி தான் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை பார்த்த நெட்டிசன்கள் மாஸ்டர் என்ற பெயரில் ஏற்கனவே படம் இருப்பதாகவும் இந்த படத்தின் லுக்கும் அதே போல் இருப்பதாகவும் கூறி அந்த போஸ்ட்டரை வைரலாக்கி வருகின்றனர்.

ஒரு வேளை அந்த மாஸ்டரின் ரீமேக் தான் இந்த மாஸ்டரோ எனவும் கேள்வி எழுப்புகின்றனர். மாஸ்டர் ரீமேக் படமா? என்பதை படக்குழு தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

the-master
the-master
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.