Master Opening Scene Video

மாஸ்டர் படத்தின் ஓபனிங் சீன் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Master Opening Scene Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி. இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தில் விஜய் சேதபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன் மற்றும் தீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தில் இரண்டு பேருக்கு டப்பிங் கொடுத்துள்ள விஜய் சேதுபதி – முதல் முறையாக வெளியான சூப்பர் தகவல்!

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் படத்தின் ஓபனிங் காட்சி என்று நம்பும் அளவிற்கு ஒரு வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது. விஜய் ரசிகர்கள் பலரும் இது மாஸ்டர் படத்தின் உண்மையான ஓபனிங் காட்சி என நம்பி ஏமார்ந்துள்ளனர்.

https://twitter.com/vj_viknesh/status/1293621834605182976?s=19
https://twitter.com/vj_viknesh/status/1293828845070503936
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.