Master Movie Vs Amazon
Master Movie Vs Amazon

மாஸ்டர், சூரரைப்போற்று படக் குழுவினருடன் அமேசான் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Master Movie Vs Amazon : கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டுள்ளன புதிய படங்கள் ரிலீஸ் செய்யப் படாமல் இருந்து வருகின்றன.

இதனால் தெலுங்கு இந்தி மொழி தயாரிப்பாளர்கள் படத்தை நேரடியாக OTT வழியாக வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சில படங்கள் வெற்றிகரமாகவும் வெளியாகி விட்டன.

இப்போதைக்கு வலிமை ரிலீஸ் பிளான் இது தான் – அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய லேட்டஸ்ட் தகவல்.!

தமிழிலும் ஜோதிகா நடிப்பில் உருவாக்கியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT வழியாக வெளியாக உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாஸ்டர் சூரரைப்போற்று படத்திற்கும் அமேசான் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு ரூபாய் 130 கோடி வரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதேபோல் சூரரைப்போற்று படத்திற்கு ரூபாய் 50 கோடி வரை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

சூர்யா எதிர்பார்த்த தொகையை அமேசான் கூறவில்லை என இதற்கு நோ சொல்லியுள்ளார். அதேபோல் தளபதி விஜய் ஆன்லைனில் படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பது சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா, கார்த்தி, ஜோதிகாவின் படங்களை இனி எங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் அவர்கள் ஆன்லைனிலேயே ரிலீஸ் செய்து கொள்ளட்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.