தளபதி விஜயின் மாஸ்டர் படம் பற்றிய மாஸான அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.
Master Movie Latest Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் பலருடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த நிலையில் தற்போது மாஸ்டர் ஷூட்டிங் முடிவடைவது எப்போது என்ற தகவல்கள் கசிந்துள்ளன.
அதாவது இன்னும் 11 நாளில் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிவடைந்து விடும் எனவும் அதன் பின்னர் படக்குழுவினர் ப்ரோமோஷனில் இறங்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ப்ரோமோஷனில் இறங்கி விட்டால் அடிக்கடி அப்டேட்டும் டீஸர், ட்ரைலர் போன்றவையும் அடுத்தடுத்து வெளியாகும் என்பதால் தொடர்ந்து தளபதியின் ஆட்டம் தான் இருக்கும்.