மாஸ்டர் படத்தின் மொத்த கதை

மாஸ்டர் திரைப்படத்தில் பார்வையில்லாமல் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பார்வையில்லாமல் நடிகர் விஜய்.. இணையத்தில் லீக்கான மாஸ்டர் படத்தின் மொத்த கதை - இதோ முழு விவரம்.!!

இந்த படத்தில் தளபதி விஜய் பேராசிரியராக நடித்து இருப்பதாகவும் அதன் பின்னர் அவர் ஹாஸ்டல் வார்டனாக மாற்றப்படுவதாகவும் அங்கே பள்ளி குழந்தைகள் போதைப்பொருளுக்கு அடிமையாவதை அறிந்த விஜய் அதற்கு காரணம் யார் என்பதை கண்டறிந்து அதனை களை எடுப்பது படத்தின் கதை என கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கூடுதல் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கல்லூரி பேராசிரியராக இருக்கும் போது குடிபோதைக்கு அடிமையான விஜய் தன் பார்வையை இழக்கிறார் அதன் பின்னர் தான் இவர் ஹாஸ்டல் வார்டனாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் போதைக்கு அடிமையாக காரணம் அர்ஜுன் தாஸ் தான் என முதலில் கண்டுபிடித்து விட்டு அதன் பின்னர் அதற்கு முக்கிய காரணம் அவருடைய அண்ணன் விஜய் சேதுபதி என கண்டுபிடித்து அவரை பழி தீர்ப்பது இப்படத்தின் கதை என தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.. ஆனால் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.