Details About Master Release
Details About Master Release

மாஸ்டர் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் தகவல் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Master Movie Story Leaked : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அனிருத் இசையமைக்க விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோர் வில்லன் வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்கள் மட்டுமல்லாமல் சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம், கே பி ஒய் தீனா, ரம்யா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஜயை வைத்து 3 படம் இயக்கியும் அட்லிக்கு வந்த சோதனை?? – வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் படத்தின் கதை இதுதான் என தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து இருப்பதை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது தளபதி விஜய் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கல்லூரியிலேயே குடியும் கும்மாளமுமாக இருக்கும் விஜயின் கெத்தை பார்த்து அதே கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் மாளவிகா மோகனன் காதல் கொள்கிறார்.

இப்படியே வாழ்க்கை நகர மாணவர்களிடையே ஏற்படும் பிரச்சினை ஒன்றிற்கு விஜய் தான் காரணம் என அவர் மீது பழி போடப்பட்டு அக்கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

அதன் பின்னர் அனாதை ஆசிரமம் ஒன்றில் பணிபுரிய துவங்குகிறார். இந்த ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகள் போதைக்கு அடிமையாவதை அறிந்த விஜய் இதற்கு என்ன காரணம்? என்பதை அறிந்து அதிலிருந்து அவர்களை எப்படி வெளியே கொண்டு வருகிறார் என்பது தான் இப்படத்தின் கதை என்ன வைரலாகும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தின் கதை இது தான் என சமூக வலைதளங்களில் பரவி வருவதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.